முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு சர்க்கரை !!!
நம் வீட்டில் சுலபமாக கிடைக்கும் சர்க்கரையை கொண்டு முகம் பொலிவு பெறலாம்.
ஃபேசியல் செய்வதற்கு முன் முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
முறை 1: எலுமிச்சை பழ சாறு 1 ஸ்பூன், கற்றாழை பசை 1 ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். மூன்றையும் சேர்த்து முகத்தில் தடவி, தேய்த்து நன்றாக கழுவி விடவும்.
முறை 2: ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை பழ சாறு 1 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனை நன்றாக கலந்து முகத்தில் போடவும்.
அதனை முகத்தில் வட்ட வடிவத்தில் மேலிருந்து கீழாக நன்றாக தேய்த்து தோலின் உள்ளிருக்கும் அழுக்கினையும், இறந்த செல்களையும் நீக்கிவிடவும்.
முறை 3: எலுமிச்சை பழ சாறு, கடலை மாவு, வெள்ளரி சாறு, தக்காளி மற்றும் சர்க்கரை அனைத்திலும் 1 ஸ்பூன் வீதம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை நன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு முகத்தில் கண்களை தவிர மற்ற பகுதிகளில் தடவ வேண்டும்.
20 நிமிடம் ஆனதும் முகத்தை கழுவி விடவேண்டும். குளிர்ந்த நீரினால் மட்டுமே முகத்தை கழுவ வேண்டும். வேறு ரசாயனம் கலந்த சோப்பை பயன்படுத்த கூடாது.
இவ்வாறு வாரத்திற்கு இருமுறை வீதம் 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் பயன்படுத்தின அனைத்து பொருட்களும் முகத்தினை மெருகூட்டவும், அழகாக்கவும், என்றும் இளமையுடனும் வைத்திருக்கும்.
முகப்பருக்கள், கருவளையங்கள், முகசுருக்கங்கள் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கும். மேலும் வெயில் காலங்களில் முகம் கருப்பாக மாறாமல் பார்த்துக்கொள்ளும். சிவப்பு நிறத்துடனேயே ஜொலிக்கலாம்.