மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் தண்டனை…?
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்து வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்குவதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்நிலையில், மெட்ரோ பயணிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”மெட்ரோரயில்பயணஒழுங்குமுறைகளைப்பின்பற்றி,சகபயணிகளின்வசதிக்கும்அமைதிக்கும்மதிப்பளிக்குமாறுஅனைத்துப்பயணிகளையும்சென்னைமெட்ரோஇரயில்நிறுவனம்கேட்டுக்கொள்கிறது.மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, அலைபேசியில் மெட்ரோ ரயில்களிலும்வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode) உள்ளிட்டமேற்கண்டசெயல்கள்மூலம்அதிகப்படியானஇரைச்சலைஏற்படுத்தும்வகையில்அலைபேசிகளைப்பயன்படுத்துவதும்மற்றவர்களுக்குஇடையூறுவிளைவிப்பதும்தண்டனைக்குரியகுற்றமாகக்கருதப்படும்.இந்தச் சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.