fbpx
HealthRETamil Newsஉணவு

எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் பப்பாளி பழம்

Papaya fruit that gives countless benefits

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி, கே போன்றவை அதிகமாக உள்ளது. இதனால் நாம் இதை  எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி எளிதாக கிடைக்கிறது.

தினமும் காலை நேரத்தில் பப்பாளிப் பழத்தை உண்டு வந்தால், நம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, நம் தோலை பளபளப்பாக்குகிறது.

காலை அல்லது இரவு நேரங்களில் பப்பாளி பழத்தினை தேனில் கலந்து உண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும் .

காலப்போக்கில் பெண்களுக்கு வயதாக வயதாக முகச்சுருக்கம் ஏற்படும். இதனை குறைக்க, அவ்வப்போது குளிப்பதற்கு முன் 20 நிமிடம் பப்பாளி பழத்தை தேனுடன் கலந்து முகத்தில் தேய்த்து ,அது காய்ந்தபின் குளித்து வர முகச்சுருக்கம் நீங்கும். முகப்பருக்களால் அவதிப்படுபவர்களும் இதனை செய்யலாம்.

ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்துக் கொள்ளவும், வயிறு சம்பந்தப்பட்ட அஜீரண கோளாறில் இருந்து மீளவும் பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பப்பாளிக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

நம் குடலில் உள்ள தேவையற்ற நாடாப் புழுக்களை நீக்கி, மலச்சிக்கல் சமத்தப்பட்ட பிரச்சனையையும் அகற்றுகிறது.

நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடல் பலவீனம் அடைவதே தவிர்க்க முடியும்.

பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பப்பாளி கலந்த ஷாம்புகளை பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும்.

 

 

 

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close