fbpx
Healthஉணவு

சீரகத்தின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 3

Benefits of Cumin - In your Kitchen Part 3

மீம்சுக்கு பேர் போன தமிழர்கள் பெயர் வெக்கறதுக்கும் பேர் போனவர்கள்ங்கறது தெரியுமா? ஒற்றை வார்த்தையில், ஏன் ஒற்றை எழுத்தில் கூட பொருள் இருக்கும் அழகிய தமிழில் பெயர் வைப்பதே ஒரு கலை. மனிதர்களுக்கு மட்டுமல்ல, உணவுப் பொருட்களுக்கும்தான். உதாரணத்திற்கு, இன்றைய தினம் நாம் பார்க்க போகும் சீரகத்தையே எடுத்துக் கொள்வோம். அகமாகிய வயிற்றை சீர் செய்வதால் சீர் + அகம் = சீரகம் என்று தமிழர்கள் இதற்கு பேர் வைத்தனர். சீரகத்தின் முக்கிய பலனையும் அதன் பெயர் மூலமே கூறி விட்டார்கள். உடலுக்கு மட்டுமல்லாமல், சீரகம் முடி உதிர்வைத் தடுக்க கூட உதவுகிறது. மேலும் சீரகத்தின் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்.

சீரகம் தரும் நன்மைகள்

சீரகம் அருமையான மருத்துவ குணங்கள் கொண்டது. சீரகம் நம் தினசரி உணவில் கண்டிப்பாக இடம் பெறுகிறது. இதோ சீரகம் தரும் நன்மைகள் சில:

  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • சளியை கரைக்கிறது
  • வயிற்று புண்ணை ஆற்ற உதவுகிறது
  • இரத்த சோகையை குறைக்கிறது
  • உடல் எடை குறைய உதவுகிறது
  • அதிகக் கொழுப்பை கரைக்கிறது
  • சர்க்கரை அளவை சரி செய்கிறது
  • ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது
  • புற்று நோய் வருவதைத் தடுக்கிறது
  • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
  • தூக்கமின்மையை போக்குகிறது
  • மூளையின் திறனை அதிகரிக்கிறது

பயன்படுத்தும் முறை

பொதுவாக சீரகத்தை சமையலில் தாளிப்பது தொடங்கி ரசம், சீரக சோறு, பொங்கல் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பது என்று பல வகைகளிலும் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகத்தின் மருத்துவ பலன்கள் முழுமையாக பெற சீரகத்தை பயன்படுத்தும் வழிகள் சிலவற்றை பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அரை டம்ளரக சுண்டிய பின் குடித்தால் வயிற்று உப்புசம் சரியாகும்; செரிமானத்தையும் பலப்படுத்தும்
  • தினசரி குடிக்கும் தண்ணீரில் சீரகத்தை கொஞ்சம் சேர்த்து நாள் முழுவதும் குடித்து வர சீரகத்தின் பலன்களை பெறலாம்.

சீரகம் – சில அழகுக் குறிப்புகள்

சீரகம் உடல் உள்ளுறுப்புகளை சீர் செய்வதனால் அந்த பெயரை பெற்றாலும் வெளித் தோற்ற பொலிவிலும் சீரகத்தின் பங்கு உண்டு. உங்கள் முகப் பொலிவுக்கும், கூந்தல் நலத்துக்கும் கூட சீரகத்தின் நன்மைகள் பயன் தரும்.

  • முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
  • பொடுகை போக்குகிறது
  • முகப்பருக்களை போக்குகிறது
  • சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது

பயன்படுத்தும் முறை

சுமார் 2 மேசைக்கரண்டி சீரகத்தை ஒரு லிட்டர் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். ஆறிய பின், அந்த தண்ணீரால் உங்கள் தலை முடியை அலசவும். பொடுத் தொல்லை நீங்குவதோடு கூந்தலுக்கு பளபளப்பும் கூடும்.

சீரக எண்ணெயை சூடாக்கி, உங்கள் தலையிலும் தலைமுடியிலும் தடவி வர, கூந்தல் நலம் பெறும்.

முடி உதிரிவைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெயும் ஆலிவ் எண்ணெயும் சம அளவில் எடுத்து நன்றாகக் கலந்து உங்கள் தலையிலும் கூந்தலிலும் தடவி வர தலைமுடி வளரும்.

சீரகப் பொடி ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் 2 டீஸ்பூன், இவற்றோடு சில துளி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close