fbpx
HealthOthersஉணவு

வாயுத்தொல்லை நீங்க சில டிப்ஸ்!

நாம் சாப்பிடும் உணவுகளை பொறுத்து நமக்கு வாயு தொல்லை ஏற்படுகிறது. சிலருக்கு தற்காலிகமாக வாயுத்தொல்லை ஏற்படும் , ஆனால் சில பேருக்கு அடிக்கடி வாயுத் தொல்லை ஏற்பட்டு அவர்களின் உடலை பாதிக்கும்.இதிலிருந்து விடுபடுவதற்கு சில வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.

வெந்நீரில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு அந்த வெதுவெதுப்பான நீரை உட்கொண்டு வந்தால் வாயுத் தொல்லை சரியாகும்.

நீர் மோரில் சிறிது கருவேப்பிலை சேர்த்து குடித்துவர வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தினமும் காலை உணவு அல்லது மதிய உணவிற்குப்பின் வாழைப்பழத்தை சாப்பிட்டு வர வாயு தொல்லை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

வெந்நீரில் நன்கு பொடி செய்த மிளகு சேர்த்து, நன்கு கொதித்த பின் அந்த சுடு நீரை வடிகட்டி குடித்து வர வாயுத்தொல்லை குணமாகும். மிளகிற்கு பதிலாக சுக்குப் பொடியும் உபயோகிக்கலாம்

வாயுத்தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி கீரை வகைகளை உண்டு வந்தால் வாயுத்தொல்லை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.முக்கியமாக வெந்தயக் கீரை, வல்லாரைக் கீரை, முடக்கத்தான் கீரை, தூதுவளைக் கீரை எடுத்துக்கொண்டால் மிக நல்லது.

தேங்காய்ப்பால் அல்லது அதன் நீரை குடித்து வர வாயுத்தொல்லை நீங்கும்.

ஆப்பிள் பழம் பேரிக்காய் பழம் போன்ற பழங்களை அன்றாடம் நாம் எடுத்துக் கொண்டு வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

இஞ்சிச் சாறு மற்றும் துளசி சாறை காலை வெறும் வயிற்றில் குடித்துவர வாயுத் தொல்லை நீங்கும்.

இறுதியாக , தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக இரவு உணவை உண்டு வந்தால் வாயு தொல்லை வராமல் பார்த்து கொள்ளலாம்..

 

Tags

Related Articles

Back to top button
Close
Close