fbpx
HealthREஉணவு

வறட்டு இருமலில்(Dry Cough) இருந்து விடுபட சில டிப்ஸ்

Some tips for getting rid of dry cough

சிலருக்கு பருவநிலை மாறும் சமயங்களில், அது அவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருமல், ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. இவைகளில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதை  சில வழிமுறைகளுடன் பார்ப்போம்.

4 அல்லது 5 உலர் திராட்சைகளுடன் , 5 சித்தரத்தையை பாலில் சேர்த்து உண்டுவர இருமல் தொல்லை குறையும். இதை கஷாயம் செய்தும் அருந்தலாம்.

தேனுடன் வெங்காயச் சாற்றை கலந்து குடித்து வந்தால் மார்புச்சளி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இரவு நேரத்தில் தொடர் இருமலால் அவதிப்படுபவர்கள், வெந்நீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அதை மூன்று அல்லது நான்கு முறை கொப்பளித்துவர தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து போகும்.

அரைத்தேக்கரண்டி அதிமதுரம் ,பட்டை பொடி, தேன் இவை மூன்றையும் சுடு நீரில் கலந்து தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குடித்து வந்தால் இருமல் பிரச்சனை தீரும்.

இருமலுக்கு சிறந்த மருந்து மிளகு. இதை பொடிசெய்து காலையும் இரவு வேலைகளிலும் ,வெந்நீரில் அரை தேக்கரண்டி மிளகுப் பொடியை சேர்த்து குடித்து வர வறட்டு இருமல் சரியாகும்.

குழந்தைகளுக்கு வறட்டு இருமல்(Dry Cough) தொடர்ந்து இருந்தால், அவர்களுக்கு தேனுடன் திப்பிலியை கலந்து குடித்து வர இருமல் குணமாகும்.

இருமல் தொல்லை அதிகமாக இருந்தால் மசாலா டீ செய்தும் குடிக்கலாம். இதற்கு தேவை அரை தேக்கரண்டி இஞ்சி பொடி,பட்டை பொடி ,கிராம்பு பொடி ஆகியவற்றை நாம் டீ போடும்போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை குடித்து வர சளி மற்றும் இருமல் ஆரம்ப நிலையிலேயே குணமாகும்.

புதினா இலையுடன் மூன்று அல்லது நான்கு மிளகை சேர்த்து சாப்பிட்டுவர இருமலில் இருந்து விடுபடலாம். இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயையும் தீர்க்க கூடியது.

Tags

Related Articles

Back to top button
Close
Close