fbpx
HealthREஉணவு

எலும்பு தேய்மானமா?(Bone deterioration) சரி செய்வது எப்படி?

Bone deterioration causes and Fixes

நம் உடலின் வலு மற்றும் வடிவத்தை கொடுப்பது எலும்பு. இது பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் தாதுக்களால் உருவாகின்றது. ஆகையால் நாம் கால்சியம் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் எலும்பு தேய்மானத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இந்த எலும்புத் தேய்மான நோயை மருத்துவத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்(Osteoporosis) என்று கூறுவர்.

முதலில், பதப்படுத்தப்பட்ட உணவுகளான ஊறுகாய், அப்பளம், சாஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் அதிகப்படியான உப்பு கலந்திருப்பதால், அதை நாம் உட்கொண்டபின் அந்த உப்பு  சிறுநீராக வெளியேறும்,  அதோடு கால்சியமும் சேர்ந்து வெளியேறிவிடும். இதனால் இதை குறைத்துக்கொள்ளவேண்டும்.

ஆகையால், கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளான பால், கீரை, முருங்கைக்காய்,வெண்டைக்காய் சுண்டைக்காய் மற்றும் சிறுதானியம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதனால் எலும்பு வலுபெறும்.

அதேபோல் பாஸ்போரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள முட்டை, மீன், பாதாம் பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புத் தேய்மானம் வராமல் தடுக்கலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து கிடைப்பதால், அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளலாம்.

இரவு நேரத்தில் தேவையில்லாமல் கண்விழிப்பது, வெப்பநிலை மிகக் குறைவாக உள்ள பகுதியில் இருப்பது போன்றவைகளாலும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. இதை குறைத்து வந்தால் தேய்மானம் வராமல் நம்மை பார்த்துக் கொள்ளலாம்.

 

 

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close