fbpx
HealthREஉணவு

இருதய நோயை(Heart Disease) தடுக்க சில வழிமுறைகள்

Some ways to prevent Heart disease

தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலருக்கு தம் உடல் நிலைகளை கவனித்துக் கொள்வதில் அக்கறை இல்லை.

தேவையற்ற துரித உணவை தம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதால் பல உடல் உபாதைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதில் முக்கியமானது இருதய நோய்(Heart Disease).

சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் இருதய நோய் வராமல் தடுக்க முடியும். அது எந்தெந்த உணவு என்பதைப் பற்றிக் காண்போம்.

கரிம உணவு மற்றும் குறைந்த கொழுப்புகள் அடங்கிய உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் நம் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள இயல்கிறது.

தினமும் உடற்பயிற்சி ,யோகா, தியானம் மேற்கொள்வதன் மூலம் நம் உடல் வலுப்பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை மென்மேலும் உயர்த்துகிறது.

பழம் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய நோயில் இருந்து விடுபடலாம், ஏனெனில் அதில் வைட்டமின் இ, அடங்கியிருப்பதால் இதை வரவிடாமல் தடுக்கிறது.

பலருக்கு தாங்கள் செய்யும் வேலைகளினால் மன அழுத்தம் ,மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகி இருப்பர். அவர்களுக்கு இருதய நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் மாதுளம்பழத்தை சாப்பிட்டு வந்தால் , அது உடலில் இருக்கும் நைட்ரிக் அமிலத்தை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

நாம் நம் உணவில் மீன்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலமும் இருதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம்  இரத்த உறைதலைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவி செய்கிறது.

நம் அன்றாட உணவில் தக்காளி பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலுகிறது. தக்காளிப் பழத்தில் வைட்டமின் சி, ஆல்ஃபா ஆகியவை அடங்கி இருப்பதால் இது இதயத்திற்கு நண்பனாக விளங்குகிறது.

அதுபோக கருப்புத் திராட்சை, டார்க் சாக்லேட், ஸ்ட்ராபெரி பழம், இதை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும்  இதய நோயில் இருந்து விடுபடமுடியும்.

சர்க்கரை நோய் (Diabetes) காரணமும் அறிகுறியும்

Tags

Related Articles

Back to top button
Close
Close