fbpx
HealthOthers

மஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ்!

ஒருவரது முக அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான், அப்படி சிரிக்கும் நேரங்களில் தங்களது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது அவர்களின் முக கவர்ச்சியை கெடுத்துவிடும்.

ஒருவரது வயது, டீ அல்லது காபி குடிப்பது, புகைபிடிப்பது இதன் காரணங்களினால் பற்கள் மஞ்சளாக காணப்படுகிறது. இதை சரி செய்வதற்கு சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

தினமும் பல் துலக்கும் சமயங்களில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து துலக்கிவர பற்களில் படிந்துள்ள மஞ்சள் கரை நீங்கும்.

இரவு உறங்குவதற்கு முன்னதாக ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாகத் தேய்த்து மறுநாள் காலையில் வாயை நன்றாகக் கொப்பளித்து, பின் பல் துலக்கி வர பற்களில் படிந்துள்ள மஞ்சள் கரை சரியாகும் மற்றும் இது பற்களின் வலிமையையும் அதிகரிக்கும்.

நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாம்பல் கொண்டு பல் துலக்கி வந்தனர்.  இதை நாம் அன்றாடம் பல் துலக்க உதவும் டூத் பேஸ்ட் உடன் சிறிது கலந்து பற்களில் தேய்த்து வர பற்களில் உள்ள கறைகள் அகலும்.

தினமும் தேங்காய் எண்ணெய் வைத்து ஆயில் புல்லிங் செய்து பின் பல்துலக்கி வர வாய் துர்நாற்றம் நீங்கி பற்களின் வெண்மை கூடும். இதற்கு பதிலாக நல்லெண்ணெயும் உபயோகித்துக் கொள்ளலாம்.

சிறிது மஞ்சள் தூளை டூத் பேஸ்ட் உடன் சேர்த்து தினமும் பல் துலக்கி வர பற்களின் மஞ்சள் கறை நீங்குவதோடு ஈறு பிரச்சனைகளும் தீரும்.

சிறிது வேப்பிலை இலையை எடுத்து , அதை நன்கு கொதித்து வரும் நீரில் போட்டு , அது நன்கு ஆறிய பின் அந்த நீரால் வாயை கொப்பளித்து வர பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கும்.

அதேபோல், நாம் தினமும் குடித்து வரும் காபி, டீ ,குளிர்பானங்கள் அருந்திய பிறகு கட்டாயமாக வாய் கொப்பிளிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் .இதைக் கடைப்பிடித்து வந்தால் பற்களில் ஏற்படும் மஞ்சள் கறையை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close