Others
பாடியநல்லூர்– பாலகணேச நகரில் உள்ள இந்தோ-பர்மா பௌத்த கோவில்–சிறப்பு செய்தி
சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம், பாடியநல்லூர் ஊராட்சி, பாலகணேச நகரில் உள்ள இந்தோ-பர்மா பௌத்த கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தர் தண்ணீர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.ஆலய நிறுவன அறங்காவலர். பார்வதி குருசாமி மற்றும் தலைவர். கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.புத்த பிட்சுகள் மந்திரம் ஓதி விழாவை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து ஆசி வழங்கினர்.வந்திருந்த அனைத்து பக்தர்களும் புத்தர் சிலைமீது தண்ணீர் ஊற்றி வணங்கினர்.அவர்களுக்கு குளிர்பானம், பழங்கள், மற்றும் பர்மா உணவு வகைகள் வழங்கப்பட்டது.மேலும் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


