fbpx
Healthஉணவு

மிளகின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 2

Benefits of Pepper - In your Kitchen Part 2

பகைவனின் வீட்டு விருந்துக்கு போனால் 10 மிளகை எடுத்து கொண்டு போ என்று பழமொழி ஒன்று உண்டு. இதை விட சுருக்கமாகவும், சிறப்பாகவும் மிளகின் பலன்கள் பற்றி கூற முடியாது. மேற்கூறிய பழமொழியில் இருந்து என்ன தெரிகிறது? பகைவன் வீட்டு விருந்தில் உங்களுக்கு கெடுதலான ஒன்றை சாப்பிட கொடுத்தாலும், அதன் நச்சுத்தன்மையை மிளகு முறித்து விடும் என்று அந்த பழமொழி உணர்த்துகிறது. இந்த பழமொழி உணர்த்தும் வேறு சேதி என்ன? பகைவனாக இருந்தாலும் அவன் விருந்துக்கு அழைத்தால் மதித்து போக வேண்டும் என்கிற தமிழர் நாகரிகத்தையும், விருந்துக்கு போனாலும் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்து தயாராக இருக்கும் தமிழரின் முன்னெச்சரிக்கை உணர்வும் தெரிகிறது. தொன்மையான காலத்தில் தமிழரின் வாழ்க்கை முறை அவ்வளவு சிறப்பானதாகவும், அறநெறி சார்ந்ததாகவும் இருந்தது. இன்றைய விலைவாசியில் வர்றவங்களுக்கு டீ, காபி கொடுக்கவே நாக்கு தள்ளி போகிறது என்பது வேறு கதை. சரி, நாம் மிளகின் மருத்துவ குணங்கள் பற்றி பேசுவோம்.

வியக்க வைக்கும் மிளகின் பலன்கள்

மிளகின் மருத்துவ குணங்களை அறிந்த நம் முன்னோர்கள் அதை உணவில் தவறாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். மிளகின் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்.

  • உடம்பிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது
  • நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
  • சளி, இருமலை சரி செய்கிறது
  • செரிமானத்தை தூண்டுகிறது
  • வாயுத் தொல்லையை போக்குகிறது
  • வயிற்று புண்ணை போக்குகிறது
  • அதிக கொழுப்பை கரைக்க உதவுகிறது
  • உடல் எடையை சீராக்க உதவுகிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது
  • அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
  • தொற்று ஏற்படாமல் தடுக்கிறது
  • பல் வலியை போக்குகிறது
  • மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
  • புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது

பயன்படுத்தும் முறை

இதற்காக தனியே ஒரு புத்தகமே எழுதலாம். ஆனாலும் உங்களை பயமுறுத்தாமல் மிளகின் மருத்துவ குணங்கள் அனைத்தையும் பெற சிறு குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.

மிளகை அப்படியே சாப்பிடலாம் (கையில் அள்ளி அல்ல, நான்கு அல்லது ஐந்து மிளகை வாயில் போட்டு மெல்லலாம்). மிளகின் பலன்களை பெற அதை தினசரி உணவில் சேர்ப்பதுடன் கஷாயமாக, ரசமாக தயாரித்து பயன்படுத்தலாம். மிளகுப் பொடியை சூப்பில் போட்டு குடிக்கலாம். மிளகுப் பொடி ஒரு சிட்டிகையையும், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூனையும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பருக நோய் எதிர்ப்பு திறன் கூடும்.

அழகை மேம்படுத்தும் மிளகு

ஆமாம், மிளகுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. மிளகினால் உங்கள் தோற்றத்துக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்று பார்ப்போம்:

  • பருக்களை போக்குகிறது
  • சரும நலத்தை பாதுகாக்கிறது
  • தோலில் ஏற்படும் சுருக்கங்களை போக்குகிறது
  • சருமத்தில் உள்ள அழுக்கை போக்குகிறது.
  • சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளிகளை போக்குகிறது
  • முடி உதிர்வை தடுக்கிறது
  • தலையில் உள்ள பொடுகை போக்குகிறது
  • தலைமுடிக்கு பளபளப்பை ஊட்டுகிறது

பயன்படுத்தும் முறை

மிளகு தூளுடன் தயிர், தேன் அல்லது மஞ்சள் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகம் பொலிவுறும்.

மிளகுத் தூளுடன் தயிர் அல்லது தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் வட்டமாக தேய்த்தால் சருமத்துவாரங்களில் உள்ள அழுக்கு வெளியேறும்.

மிளகு தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து சுமார் 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்தால் முடி பிரச்சினைகள் தீருவதோடு முடியும் பலம் பெறும்.

 

Related Articles

Back to top button
Close
Close