fbpx
HealthREஉணவு

ஒன்றாக இணைத்து சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Learn to Eat these Food Together!

ப்ரோக்கோலி மற்றும் தக்காளி முதல் பருப்பு மற்றும் அரிசி வரை, உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை செய்யக்கூடிய சில உணவு சேர்க்கைகளை அறிந்து கொள்ளுங்கள்!

சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக இருக்கும்போது சிறப்பாக செயல்படும். அவை பல்வேறு ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு தருவது மட்டுமல்லாமல், நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது.

உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டைனமிக் உணவுகள் இதோ;

1. ப்ரோக்கோலி மற்றும் தக்காளி

ப்ரோக்கோலியை தக்காளியுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். தக்காளியில் லைகோபீன் எனப்படும் சக்திவாய்ந்த antioxidants நிறைந்துள்ளது, ப்ரோக்கோலியில் சல்போராபேன் எனப்படும் மற்றொரு நன்மை பயக்கும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து, புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.தக்காளி மற்றும் ப்ரோக்கோலி இரண்டும் வேகவைக்கும்போது அல்லது சமைக்கும்போது அவற்றின் சத்துக்கள் அதிகரிக்கின்றன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே நறுக்கிய ப்ரோக்கோலி மற்றும் தக்காளியை உங்கள் காலை உணவுக்கு ஆம்லெட் போன்றவற்றில் சேர்க்கலாம்.

2. க்ரீன் டீ மற்றும் லெமன்

க்ரீன் டீயில், கேடசின்கள் போன்ற antioxidants பல நிறைந்துள்ளது. எலுமிச்சை சாறுடன் க்ரீன் டீயை இணைக்கும்போது antioxidants திறன் 5-10 மடங்கு அதிகரிக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் இது க்ரின் டீயில் உள்ள கேடசின்களுடன் சரியாக இணைகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் சில வகையான புற்றுநோய்களையும் எதிர்த்துப் போராடவும் உதவுவதாக நம்பப்படுகிறது.
எனவே அடுத்த முறை உங்கள் கப் கிரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து கொள்ளவும்.

3. மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு

மஞ்சளின் பயோஆக்டிவ் வடிவம் குர்குமின் ஆகும், இது இதுவரை அறியப்பட்ட மிக சக்திவாய்ந்த antioxidantsல் ஒன்றாகும். இது, வலுவான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கருப்பு மிளகில் உள்ள பயோஆக்டிவ் கலவை பைபரின் என அழைக்கப்படுகிறது. இது ஒன்றாக இணையும்போது, ​புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளை மேம்படுத்த உதவுகிறது.

Related Articles

Back to top button
Close
Close