மகளிர் உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தப்படும்–மு.க. ஸ்டாலின்..
சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணியின் 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இந்த உரையில், தமிழக அரசின் மிக முக்கியத் திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ குறித்துபல்வேறுமுக்கியஅறிவிப்புகளைஅவர்வெளியிட்டார் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அடுத்த முறை தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தப்படும் என்று உறுதி அளித்தார். இந்தத் திட்டம் தமிழகப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர் குறிப்பிட்டார்..இப்போது ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், இந்த உரிமைத் தொகை ₹2,000-ஆக உயர்த்தப்படும் என்பதை இந்தச் சேலம் மண்ணில் இருந்து நான் உறுதிபடத் தெரிவிக்கிறேன்.மகளிர் உரிமைத் தொகை ₹1,000 மற்றும் விடியல் பயணத் திட்டம் (இலவசப் பேருந்து பயணம்) ஆகிய இரண்டின் மூலமாக மட்டும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும் மாதம் ₹800 முதல் ₹900 வரை சேமிக்க முடிகிறது.