fbpx
ChennaiHealthRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சாலை வரி செலுத்துவது குறித்து 6ம் தேதி வரை நடவடிக்கை வேண்டாம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்!

Chennai lorry owners case against government

சென்னை:

சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் வரும்  6ம் தேதிவரை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அனைத்து வாகனங்களும் முழு ஊரடங்கு உத்தரவால் இயங்கவில்லை.  இதனால்,  சாலை வரியை செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசின் சார்பாக  கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,  பதில் அளிக்க 2 வார கால அவகாசம்  வேண்டும் என்று கேட்டார்.

இதையடுத்து,  வழக்கு விசாரணையை நீதிபதி 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.  அதுவரை,   சாலை வரி தொடர்பாக அரசு எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close