fbpx
HealthREஉணவு

இந்த கோடையில் நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டிய காரணங்கள்

Benefits of Eating Cucumber in summer!

வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது கொழுப்பு செல்கலைக் கரைக்க உதவுகிறது. நமது உடலுக்கு கோடை காலங்களில் நீர்ச்சத்து‌ அதிக அளவில் தேவைப்படுகிறது, எனவே இதில் உள்ள 95% நீர்ச்சத்து நமக்கு பெரிய அளவில் உதவுகிறது.

மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி அடங்கியுள்ளது. இதனால் இதை சாப்பிடும்போது, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது. மேலும் இதனை நாம் சூப் அல்லது சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம்.

1. எடை இழப்புக்கு உதவும்

வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும்  வெள்ளரிக்காயில் 0% கொழுப்பு மற்றும்  ஃபைபர் போன்றவை உள்ளது. வெள்ளரிக்காயில் கலோரிகளும் குறைவாக உள்ளன,எனவே இது உங்கள் உடல் எடையை குறைக்க அதிக அளவில் உதவுகிறது. மேலும் நீங்கள் ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் இந்த வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்ளலாம் என்றும் இதனை நீங்கள் சாலட்டின் ஒரு பகுதியாகவும் எடுத்து கொள்ளலாம்.

2. உங்கள் வெப்பத்தை தணிக்கிறது

மனித உடல் ஒழுங்காக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். கோடைக்காலங்களில் நீங்கள் அதிக தண்ணீரை இழப்பதால் அதிக நீர் தேவை ஏற்படுகிறது. வெள்ளரிக்காயில் சுமார் 96 சதவீதம் தண்ணீர் உள்ளதால் இது உங்களை வெப்பமயமாக்குதலில் இருந்து விடுபட உதவுகிறது.

3. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.மேலும் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் உணவில் வெள்ளரிக்காயைச் சேர்ப்பது குறைந்தபட்ச சோடியம் நுகர்வு மற்றும் இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறுகின்றனர்.

4. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை உட்கொள்ளலாம் என்றும் ஆய்வுகளின் படி, வெள்ளரி இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என இரண்டிற்குமே வெள்ளரிக்காய் உபயோகப்படுத்தப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close