fbpx
HealthREஉணவு

கர்ப்ப காலத்தில் (Pregnancy) பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!

Foods That Women Should Take During Pregnancy

பெண்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் என்னவென்றால் அது கர்ப்பகாலம்(Pregnancy) தான். இந்த காலத்தில் சில ஆரோக்கியமான உணவு முறைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கிறது.

இந்த காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்து அதிக கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலுக்கு தேவையான தண்ணீரை அவ்வப்போது எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தது 7 முதல் 9 டம்ளர் அளவிற்கு நீர் அருந்தி வரவேண்டும்.

இந்த நேரத்தில் சில பெண்களுக்கு வாந்தி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் பாயாசம் மற்றும் கேசரிக்கு பயன்படுத்தும் கிஸ்மிஸ் பழம் நிறைய எடுத்துக் கொண்டால் வாந்தி வருவது கட்டுப்படும்.

குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது பால், பழம், பழச்சாறு, போன்றவை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் (Pregnancy) எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்

முக்கியமாக பிரசவ காலத்தில் பப்பாளி, கருப்பு திராட்சை, அன்னாசி, கொய்யா போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், பச்சை திராட்சை போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல், இசை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடப்பது போன்றவை உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

அதேபோல் கர்ப்பிணி பெண்கள், அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது. தனது படுக்கையிலிருந்து எழும்போது பொறுமையுடன் எழுந்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் கர்ப்பிணி சரியாக கடைபிடித்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close