fbpx
HealthREScienceTamil Newsஉலகம்

பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!!

யு.சி.எல்.ஏ (UCLA) மற்றும் பேய்லரின் (Baylor) ஆராய்ச்சியாளர்கள் குழு சின்னங்களை வரைவதற்கான ஒரு முறையை உருவாக்கியுள்ளது.

மின் தூண்டுதலைப் பயன்படுத்தி மனித மூளையில் நேரடியாக செலுத்துவதன் மூலம் பார்வையற்றவர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதன் விளைவாக பார்வையை முற்றிலுமாக இழந்த நபர்கள் வடிவங்களை  உணர முடிகிறது .

புதிய செயல்முறை மூலம் மனித கண் மற்றும் பார்வை நரம்பைத் தவிர்த்து, மூளையின் பின்புறத்தில் அமைந்துள்ள காட்சி புறணி(visual cortex) பகுதியில் பொருத்தப்பட்ட மின்முனைகளைத் தூண்டுவதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இது டைனமிக் தூண்டுதலின் மூலம் செயல்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

கால்-கை வலிப்பு சிகிச்சையின்(epilepsy) ஒரு பகுதியாக ஏற்கனவே மூளை உள்வைப்புகளைக் கொண்டிருந்த இரண்டு பார்வையற்ற நபர்கள் மற்றும் நான்கு பேரை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அமைப்பை வைத்து சோதித்தனர். அதில் பங்கேற்றவர்கள் ,

தங்கள் மனதில் நினைத்த சரியான வடிவத்தை 80 முதல் 93 சதவிகிதம் வரை துல்லியமாக உணர்ந்தனர் என்று மருத்துவர் கூறினார்.

தற்போதைக்கு, இந்த தொழில்நுட்பம் சோதனை நிலையில் உள்ளது. இது சரியான திசையில் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

 

Tags

Related Articles

Back to top button
Close
Close