தற்போதுள்ள உணவு பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றது. ஆனால் இடியப்பம் சாப்பிடுவதால் எத்தகைய பின்விளைவுகளும் ஏற்படாது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்னோர்கள் காலத்திலிருந்தே இந்த இடியாப்பம் வகை உணவு நடைமுறையில் உள்ளது. இது ஓர் மூங்கில் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதாலும் எளிதில் சீரணமாகும் சக்தி கொண்டுள்ளதாலும் வயதானவர்களும் , சிறு குழந்தைகளும் சுலபமாக உட்கொள்ளும் உணவாக உள்ளது இந்த இடியாப்பம். மேலும் காய்ச்சல் உள்ளவர்களும் இதை பயப்படாமல் சாப்பிடலாம் எத்தகைய விளைவும் ஏற்படாது.
தற்போது இந்த இடியாப்பம் அனைத்து ஹோட்டல்களிலும் , சிறு கடைகளிலும் எளிதில் கிடைக்கும் உணவாக உள்ளது. இதை தயாரிப்பது எளிதாக இருந்தாலும் இதன் பக்குவம் தெரிந்தவர்களால் தான் இதை செய்ய முடியும். எனவே இதற்க்கு கூட்டு தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மற்ற கடைகளுக்கு
சப்லே செய்யப்படுகின்றது.
இந்த இடியாப்பம் நீர் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால் எத்தகைய பின் விளைவுகளும் ஏற்படாது. மேலும் இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் , இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு அதிக அளவிலும், எந்த நேரத்திலும் கொடுக்கும் உணவாக உள்ளது. இதோடு தொட்டு சாப்பிட குர்மா , பால் , தேங்காய்ப்பால் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.
இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த இடியாப்பம் குறைந்த விலை உள்ளதாகவும் , அனைத்து சிறிய கடைகளில் கிடைப்பதாகவும் உள்ளது.