fbpx
Others

சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள்வெற்றி

இலங்கை நாட்டில் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியம் போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்று வெற்றி பெற்று மீண்டும் கோவை திரும்பினர் :கோவை ரயில் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்தும் வரவேற்றனர் : 

கோவையை சேர்ந்த ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி நடனப்பள்ளி மாணவர்கள் இலங்கை நாடு கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். கோவை இரயில் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்தும் வரவேற்றனர். இது தொடர்பாக அகாடமியின் நிறுவனர் சுபா வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்ட போட்டியில் பங்கேற்றதாகவும், ஏற்கனவே மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் இலங்கைக்குச் சென்றதாகவும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.மேலும் சமூக வலைதளங்களில் படித்து தெரிந்து கொள்ளாமல் அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து பழகுவது அவசியம் அதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் நமது பாரம்பரியமான பரதநாட்டியத்தை அடுத்த நாட்டிற்கு கொண்டு சென்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.ஜூலை மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் குழந்தைகளுக்கு பள்ளி இருப்பதினால் அது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் குழந்தைகள் இதில் நடனமாடியது அனைவரும் கவர்ந்ததாக தெரிவித்தார்.மத்திய அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் எளிதாக சென்று விட்டதாகவும், குழந்தைகள் மொபைல் ஃபோனில் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close