fbpx
REஉணவுவிவசாயம்

ஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி?

How to cultivate Apple ?

 

ஆப்பிள் பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களுள் ஒன்று. ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, ப்ரோடீன்,சர்க்கரை,கொழுப்பு,பி1,பி2 முதலிய சத்துக்கள் உள்ளன. ஆப்பிள் பழங்கள் சாப்பிட்டால் ரத்த சோகை,கீழ் வாதம், துடைவாதம் முதலியவை விரைவில் நிவர்த்தியாகும். செரிமான மண்டலங்கள் சீராக இயங்கவும் ஆப்பிள் பழங்கள் உதவியாக இருக்கும்.

ஆப்பிள் நடவு செய்ய ஏற்ற பருவம் ஜூன் முதல் டிசம்பர் வரை ஆகும். இந்த ஆப்பிள் ரோசாசிடே குடும்பத்தை சார்ந்ததாகும். ஆப்பிள் பயிரிடுவதற்கு மண்ணின் கார அமிலத்தின்  தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்க வேண்டும். செம்மண் கலந்த வண்டல் மண் ஆப்பிள் பயிர் செய்வதற்கு மிகவும் ஏற்றது. செடிகள் வளர்ந்து தளிர்த்து வளரும் வரை நீர்பாய்ச்சுவது அவசியம்.

நிலத்தில் நன்கு செடிகள் சாயாதவாறு இருபுறமும் குச்சிகளை வைத்துக் கட்ட வேண்டும். அப்பொழுது தான் பலத்த காற்று அடிக்கும் போது செடிகள் சாயாது. 4/4 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ நீளம்,அகலம் ஆழத்தில் எடுத்து செடியினை நடவேண்டும். மரங்களில் ஏற்படும் நோய்களான படர் பாசி,சொறிநோய் முதலியவற்றை முன்ப அகற்றுவது நல்லது அப்பொழுதுதான் நல்ல மகசூல் கிடைக்கும்.

மரம் ஒன்றிற்கு 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ மணிச்சத்து, 1 கிலோ சாம்பல் சத்து, 25 கிலோ தொழு உரம் உள்ளிட்ட உரங்களை இடவேண்டும். ஆண்டிற்கு இருமுறை ஆப்பிள் மரத்திற்கு இந்த உரங்களை இடவேண்டும். செடிகள் நட்ட 4ம் ஆண்டிலிருந்து காய்க்க துவங்கிவிடும். மரம் ஒன்றில் சுமார் 10 முதல் 20 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். நன்கு பழுத்த பழங்களை முன்பே அறுவடை செய்வது நல்லது.

 

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close