சுவையான நண்டு வறுவல்!
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட நண்டு 1/2 கிகி
கடுகு, உளுத்தம் பருப்பு – 1தேக்கரண்டி
வெங்காயம் -பெரியது 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
தனியா தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
மிளகு தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
நன்றாக நண்டினை சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த உடனேயே நண்டு சமைக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால் சுவையாக இருக்காது. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதினை சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும், வதங்கினதும் அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா தூள், தேவையான அளவு உப்பு, 1 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும். 10 நிமிடம் வரை இவற்றை கொதிக்க விடவேண்டும்.
பிறகு நண்டையும் சேர்த்து கிளறி விடவும். மிதமான தீயில் 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். சுவையான காரசாரமான நண்டு வறுவல் தயார்.
மாதத்திற்கு 2 முறையாவது நண்டினை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. உடம்பில் எலும்பிற்கு வலுவூட்டும்.