fbpx
HealthREஉணவு

சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில விஷயங்கள்

Some things not to do after eating

நாம் உணவு உண்ட பின் சில விஷயங்கள் செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். அதற்குப்பின் அறிவியல் மறைந்து இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் அதற்கு உணவு மிக முக்கியமானது. எது சாப்பிட்டால் உடலுக்கு நன்மை விளைவிக்கும் என்பதைவிட சாப்பிட்ட பிறகு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது மிக முக்கியமான ஒன்று.

செய்யக்கூடாதவை:-

  • தேநீர் அருந்துவது:- தேநீரில் தேயிலை அதிகம் கலந்திருப்பதால், அது நாம் சாப்பிட்ட உணவு மூல பொருட்களுடன் சேர்ந்து உணவு செரிப்பதை பாதிக்கிறது. இதனால் உணவு உண்டபின் தேநீர் குடிப்பதை  தவிர்க்க வேண்டும்.
  • புகை பிடிப்பது:- உணவுக்குப் பின் ஒருவர் ஒருமுறை புகைபிடித்தால் கூட , அது பத்து முறை புகை பிடிப்பதற்கு சமமாகும். இதனால்தான் புற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • குளிக்க கூடாது:- சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை கால்களில் இரத்த ஓட்டம் மிகுதியாகி, இதனால் உணவு செரிக்கத் தேவைப்படும் இரத்த ஓட்டம் குறைந்து வயிற்றிலுள்ள உணவு செரிமானத்தை குறைகிறது.
  • நடக்கக்கூடாது:- சாப்பிட்டவுடன் உடனடியாக நடந்தால் உணவில் உள்ள சத்துகளை நம் உணவு மண்டலம் எடுக்க விடாமல் போய்விடும். இதனால் நாம் எடையை குறைக்க வேண்டும் என்று நடந்தால் அதை அதிகாலை அல்லது மாலை நேரத்தில் செய்வது நம் உடலுக்கு நல்லது.
  • தூங்கக் கூடாது:- சாப்பிட்டவுடன் தூங்குவது நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகும். செரிமானத்தின் போது சாப்பாடு நம் குடல் பகுதிக்கு செல்லும், இதனால்  நாம் சாப்பிட்டவுடன் தூங்கினால் உணவு குடல் வரை செல்லாமல் நம் தொண்டையை நோக்கி கீழிறங்கும். ஆகையால், சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • பழம் சாப்பிடக்கூடாது:- சாப்பிட்டு முடித்தவுடன் உடனே பழம் எடுத்துக்கொள்வது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் உணவின் செரிமானம் 5 மணி நேரம். ஆனால் பழங்களின் செரிமானமோ 2 மணி நேரம்தான். இதன் காரணமாக நாம் உடனே பழம் உட்கொண்டால் , நாம் சாப்பிட்ட பழம் செரிக்காமல் வாயுவாக மாறும் . இதனால் வாயு தொல்லை ஏற்படும்.

எனவே, இதையெல்லாம் கவனித்து நாம் செய்யாது இருந்தால் நம் உடலுக்கு எந்தவித நோயும் ஏற்படாது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close