fbpx
HealthREஉணவு

மகத்துவம் நிறைந்த தங்க திரவம்!

The golden liquid of greatness!

நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது நெய். இது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நெய்யை தங்க திரவம் என்றும் அழைப்பர்.

நெய்யை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் மூளையின் திறன் மேம்படும். குரல் வளம் மேம்படவும் ,இதை எடுத்துக்கொள்ளலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இதை வெந்நீரில் கலந்து குடிப்பதன் மூலம் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மூட்டுவலி, குடற்புண் ஆகியவற்றை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நெய்யில் தேவையான அனைத்துவிதமான வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இதில் முக்கியமாக கொழுப்பைக் கரைக்கக் கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயம் வலு பெற உதவுகிறது.

குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட வேண்டுமென்றால், நெய்யை  அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் அலர்ஜி ஏற்பட்டு இருக்கும்.அவர்கள் அதற்கு பதிலாக நெய்யை உணவில் சேர்த்துக்கொண்டால் பாலில் கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் இதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும்.

சிலர் சாப்பிட்டதை செரிக்க முடியாமல் அவதிப்படுவார்கள், அவர்கள் நெய்யை தன் உணவில் சேர்த்துக்கொண்டால் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அதேசமயம் இதில் கலோரிகள் அதிகம் இருக்கத்தான் செய்யும். ஆனால், நம் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொண்டால் நம் உடலுக்கு எந்தவித நோயும் அண்டாது.

நெய் இல்லா உண்டி பாழ்

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close