fbpx
HealthREஉணவு

நல்லெண்ணெய்(Sesame Oil) பயன்படுத்துவதால் இவ்வளவு பயன்களா ?

Uses and Benefits of Sesame Oil

பிற எண்ணெய்களை காட்டிலும் நல்லெண்ணெய்(Sesame Oil) நமக்கு மிகுந்த பயன்களை அள்ளித் தருகிறது. இது உணவுக்கு மட்டுமின்றி அனைத்திற்கும் பயன்படுகிறது.

இதை நாம் அன்றாடம் நம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது, இதயம் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான எந்தவித நோயும் அண்டாது பாதுகாக்கிறது.

நல்லெண்ணை தேய்த்து குளித்துவர கண் குளிர்ச்சி கிடைப்பதோடு, முடியின்  அடர்த்தியும் கூடும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால்  , தைராய்டை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். இதை அனைவரும் செய்து வரலாம், இதை செய்வதால் பல் சொத்தைகள் மற்றும் வாய் துர்நாற்றம் அகலும்.

வயதானவர்கள் என்றாலே மூட்டுவலி பிரச்சனைதான், இதை சரிப்படுத்த, தினமும் இரவில் உறங்குவதற்கு முன் மூட்டுகளில் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் மூட்டு வலி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள், வெள்ளைக்கருவுடன் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பருவில் இருந்து விடுபடலாம்.

தற்போது உள்ள சூழ்நிலையில், அதிகபட்சம் கணினி  முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்கள் அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும் பொழுது அவர்களுக்கு கண்ணெரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் இதிலிருந்து விடுபடலாம்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் இந்த அவஸ்தையில் இருந்து மீளலாம்.

 

சர்க்கரை நோய் (Diabetes) காரணமும் அறிகுறியும்

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close