fbpx
HealthREஉணவு

உடல் சூட்டைத் தணிக்க சில வழிமுறைகள்

Some ways to alleviate body heat

நம் உடலின் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் இருக்க வேண்டும். அந்த வெப்பம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நம் உடலில் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

அவ்வாறு உடலின் வெப்பம் அதிகரிக்கும் பொழுது கண் எரிச்சல், வயிற்று வலி, கொப்பளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் , அவற்றைப் பற்றி காண்போம்.

வெயில் காலத்தில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்ளும் உணவில் தயிர் மோர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் அவை நம் உடல் சூட்டை தணிக்கும்.

கற்றாழையின் ஜெல்லை எடுத்து 20 நிமிடம் நம் முகத்தில் ஊற வைத்து பின்பு கழுவினால் , அது நம் உடலை குளுமை படுத்தும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை வெயில் காலத்தில் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால் உடல் சூடு அகலும்.

வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும். இது வெயில் காலத்தில் மிகச் சிறந்த பானம்.

உடலின் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும் என்றால், தினமும் இரவில் உறங்குவதற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளை உட்கொண்டு வர வேண்டும். ஆனால் முக்கியமாக இதை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு , பின் அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் நம் உடல் வெப்பத்தை சீராக்கும்.

கோடை காலத்தில் நம் உடல் வறட்சி அடையாமல் குளிர்ச்சியுடன் இருப்பதற்கு தினமும் ஒரு இளநீர் பருகி வரவேண்டும். இது நம் உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது.

இறுதியாக வெயில் காலத்தில் தண்ணீர் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதை செய்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close