fbpx
REஉணவு

இந்திய உணவு முறையே சிறந்தது! ஏன் தெரியுமா ?

Indian food is the best! Do you know why?

இந்திய உணவுகள் சுவை மட்டுமல்லாது, சமையல் முறைகளிலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இந்திய கலாச்சாரத்தைப் போலவே, இந்தியாவில் உள்ள உணவுகளும் பல்வேறு நாகரிகங்களால் வளர்க்கபட்டு அவை தனித்து நிற்கின்றன. இந்தியாவில் வட இந்தியா அல்லது தென்னிந்தியாவாக இருந்தாலும், மசாலாப் பொருட்கள் அதிக அளவில் உணவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலாவுக்கும் பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதை ஒருவரும் மறந்துவிடக் கூடாது.

வட இந்திய உணவு முறைகள்

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் சப்பாத்திகளை தான் பிரதான உணவாகக் கொண்டுள்ளன.இந்த சப்பாத்திகள் கோதுமை, அரிசி, மைதா போன்ற பலவிதமான மாவுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. சப்பாத்திகள் தவிர இந்த பிராந்தியங்களில் சுடப்படும் நெருங்கிய தொடர்புடைய ரொட்டிகளான தந்தூரி, ருமாலி மற்றும் நான் போன்றவையும் அடங்கும். இருப்பினும் வடக்கு பிராந்தியத்தில் முகலாய உணவின் தாக்கம் மிகவும் வெளிப்படையானது.

மேற்கு இந்திய உணவு முறைகள்

மேற்கு இந்தியாவில், பாலைவன உணவுகள் அதன் தனித்துவமான சுவை மற்றும் உணவு வகைகளுக்கு பிரபலமானது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவை இந்திய உணவின் இனிப்பு சுவையை குறிக்கும் மாநிலங்கள். இங்கே ஏராளமான பருப்புகள் மற்றும் அச்சர்கள் (ஊறுகாய்) பயன்படுத்தப்படுகின்றன,

கிழக்கு இந்திய உணவு முறைகள்

கிழக்கு இந்தியாவில், பெங்காலி மற்றும் அசாமி பாணியிலான சமையல் முறைகள் குறிப்பிடத்தக்கவை. வங்காளிகளின் பிரதான உணவு அரிசி மற்றும் மீன்கள் தான். பொதுவாக வங்காளிகள் பல வகையான மீன்களை சாப்பிடுவதை விரும்புகிறார்கள். பெங்காலி சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு முக்கிய மூலப்பொருள் ‘Bamboo Shoot’.

தென்னிந்திய உணவு முறைகள்

தென்னிந்தியாவில், மசாலா, மீன் மற்றும் தேங்காய்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டின் உணவுகளில் புளியின் பயன்பாடு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.ஆந்திராவின் சமையல பொருத்த வரை அவர்கள் மிளகாயை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது உணவுகளின் சுவையை மேம்படுத்த உதவுகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஆப்பம், மலபார் வறுத்த இறால்கள், இட்லி, தோசைகள், மீன் மோலி மற்றும் அரிசி புட்டு ஆகியவை மிகவும் பிரபலமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close