fbpx
HealthREஉணவு

மருத்துவ குணம் நிறைந்த உலர் திராட்சை!

Dry grapes with medicinal properties!

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் இருக்கிறது. உலர் திராட்சையில் வைட்டமின் C,D , இரும்புச்சத்து, புரதச்சத்து‌ மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.

சிறுநீரகத்தில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அதைக் குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியில்தான். அது என்னவென்றால், இரவில் உறங்குவதற்கு முன் எட்டு அல்லது பத்து உலர் திராட்சை நீரில் ஊறவிட்டு மறுநாள் காலையில் அதை நீருடன் உட்கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை குறையும்.

உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், நன்கு கொதிக்க வைத்த நீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து பின்பு உட்கொண்டால் உடல் சூடு தணியும்.

இதயத் துடிப்பு சீராக இல்லாதவர்கள், இதை பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயத்துடிப்பு சீராகும். இதை இரவு தூங்குவதற்கு முன் செய்து வந்தால் சுகமான தூக்கம் கிடைக்கும்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இதை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்பு நன்கு வலுப்பெறும். எனவே உலர் திராட்சையை தினமும் எடுத்துக்கொண்டால் எவ்வித நோயும்  அண்டாது.

 

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close