சுவையான சில்லி இறால் சமைப்பது எப்படி !!!.
சில்லி இறால் செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட இறால் 1/2 கிகி
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சோலா மாவு 3 ஸ்பூன்
மைதா மாவு-3 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
தண்ணீர்
உப்பு
எண்ணெய்
வெங்காயம் 1 நறுக்கியது
மிளகு தூள் 1 ஸ்பூன்
கொடைமிளகாய் 1
செய்முறை:
முதலில் இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். அதனுடன் 3 தேக்கரண்டி சோல மாவு, 3 தேக்கரண்டி மைதா மாவு, 1 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு , 1 ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்த்து கிளறி 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு வாணலியில் 100 மில்லி எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் இறாலை பொரித்தெடுக்கவும். கருக விடாமல் பார்த்து கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் இட்டு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொடைமிளகாய் இரண்டையும் நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 5, மிளகாய் சாஸ் 3 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி சோயா சாஸ், மிளகு தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் பொரித்து வைத்திருக்கும் இறாலை சேர்த்து 10 நிமிடம் வரை கிளறவும்.
வெங்காய தாள் அல்லது கொத்துமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான காரா சாரமான சில்லி இறால் தயார்!