fbpx
உணவு

சுவையான எள்ளு பூரணம் கொழுக்கட்டை !!

தேவையான பொருட்கள்:

கருப்பு எள்ளு 200கி
பாகு வெள்ளம் 1/2 கிகி
தேங்காய் 1 (துருவிக்கொள்ளவும்)
ஏலக்காய் 3 (பொடிசெய்து கொள்ளவும்)
பச்சரிசி 1/2 கிகி
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
நெல்லெண்ணய் 1 தேக்கரண்டி

எள்ளு பூரணம் செய்முறை:

எள்ளுவை எடுத்து கல் தூசி இல்லாமல் சுத்தம் செய்துகொள்ளவும். பிறகு தண்ணீர் விட்டு நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். தண்ணீர் வடிந்ததும் அதனை ஒரு துணியில் பரப்பி காய வைக்க வேண்டும். தண்ணீர் பதம் இல்லாத அளவிற்கு எள்ளு காய்ந்தவுடன் ஒரு கடாயில் இட்டு வறுத்தெடுக்கவும். வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அதனை எடுத்து மிக்சி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.

பச்சரிசியை எடுத்துக்கொண்டு 3 முறைக்கு மேல் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் அதனையும் ஓரு காட்டன் துணியில் இட்டு காய வைக்கவேண்டும். ஈரப்பதம் இல்லாமல் அரிசி நன்றாக காய்ந்ததும் மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து நன்றாக மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும். தண்ணீரை கொதிக்க விடவும். பின்னர் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு சூடான தணண்ணீர் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து கரண்டியை கொண்டு கலக்கவும். மிருதுவான மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பாகு வெல்லத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்த எள்ளுவையும், வெள்ளம், ஏலக்காய் தூள், துருவின தேங்காய் அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சுவையான பூரணம் தயார் நிலையில் உள்ளது. பூரணத்தை சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.

அரிசி மாவை கொஞ்சம் எடுத்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைகளாக்கி அதனுள் உருண்டை பிடித்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து மூடவும். இவ்வாறு கொழுக்கட்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இதற்கிடையே இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டு மீது ஒரு வெள்ளை துணி வைத்து பாத்திரத்தை மூடவும். 10 நிமிடம் கழித்து ஆவி வந்ததும் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் பரவலாக வைத்து விடவும். 15 நிமிடம் கழித்து நன்றாக வெந்துவிடும். சுவையான எள்ளு பூரண கொழுக்கட்டை உண்பதற்கு தயார்.

Related Articles

Back to top button
Close
Close