fbpx
GeneralRETrending Nowஉலகம்

உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! ஒட்டுமொத்த பாதிப்பு 1.19 கோடியாக உயர்வு!

World corona cases crosses 1.19 crore

ஜெனீவா:

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 200 நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே திணறுகிறது.

இந் நிலையில், உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:

தற்போதய நிலவரப்படி உலக அளவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,41,601 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 68,44,973 ஆக உள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 545,651 ஆக உள்ளது.   கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா (3,096,902 ), பிரேசில்  (1,674,655 ),  ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close