fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…! தொண்டர்கள் சோகம்!

Janmejai Singh, BJP MLA From Sadar in Deoria, Dies Due to Heart Attack

லக்னோ:

பாஜக எம்.எல்.ஏ தியோரியா சதர் தொகுதியைச் சேர்ந்த ஜன்மேஜாய் சிங் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 75.

இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக  லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது, அவர் மாரடைப்பு  காரணமாக உயிரிழந்தார். லக்னோ சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள எம்.எல்.ஏ ஜன்மேஜாய் சிங் தியோரியாவிலிருந்து வந்திருந்தார்.

4 மாதங்களுக்கு முன்பு மறைந்த எம்.எல்.ஏ ஜன்மேஜயா சிங்குக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டது  என்பது தெரியவந்தது. அவருக்கு மூன்று மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். 2000 ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முறையாக பகுஜன் சமாஜ் கட்சியில்  எம்.எல்.ஏ. ஆனார்.

பின்னர் 2007- ல் பாஜகவில் சேர்ந்தார்.  அவர், 2012 -ல் அவர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரமோத் சிங்கை 23,295 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2017 ல் அவர் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஜே.பி.ஜெய்ஸ்வாலை 46,236 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால், உத்தரபிரதேசத்தின் 16 மற்றும் 17 வது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close