தெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..!
Fire at Srisailam hydroelectric plant in Telangana, 8 trapped
ஐதராபாத்:
ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலத்தின் அணையின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நிலத்தடி நீர்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று காலை நடந்ததாக கூறப்படுகிறது.
மின் நிலையத்தின் யூனிட் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக பேனல் போர்டுகள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடம் புகையால் சூழ்ந்துள்ளது என கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் 17 பேரில், 8 பேர் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பிற்கு தப்பினர். மீதமுள்ள ஒன்பது பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிக்கியவர்களில் ஆறு பேர் டி.எஸ். ஜென்கோ ஊழியர்கள் எனவும், மூன்று பேர் தனியார் நிறுவன ஊழியர்கள்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்து காரணமாக கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.