உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..! அமெரிக்காவில் அதிகரிக்கும் பலிகள்!
World corona patients crosses 2.28 crore

ஜெனீவா:
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இந் நிலையில் உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.55 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.96 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 57.45 லட்சம், பிரேசிலில் 35.05 லட்சம், ரஷ்யாவில் 9.42 லட்சம் பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 1.77 லட்சம், பிரேசிலில் 1.12 லட்சம், ரஷ்யாவில் 16,099 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.