விறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்…! ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு!
Joe biden democratic party president candidate
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலுக்காக அதிபர், துணை அதிபர் பதவிக்கு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ள ஜோ பைடன், அதில், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று ட்வீட் செய்துள்ளார்.
ஜோ பைடன் ஒபாமா தலைமையிலான ஆட்சியில் துணை அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜோ பைடன், தமது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் பிறந்தவருமான கமலா ஹாரிஸை தேர்வு செய்தார்.