ஒருபக்கம் பொருளாதாரத்தடை…! மறுபக்கம் ஏவுகணைகள் அறிமுகம்…! ‘தில்’ காட்டும் ஈரான்
Iran launches 2 new missiles
டெஹ்ரான்:
பொருளாதாரத் தடைகளுக்கு இடையில் ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனால், வேறு நாடுகள் மீது விதிக்காத பொருளாதாரத் தடையை ஈரான் மீது அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்த பொருளாதாரத் தடைகளுக்கு இடையில் ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏவுகணைகளுக்கு அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளிக் குழுவின் தலைவர் அபு மக்தி அல் முக்திஸ் ஆகிய இருவரின் பெயரை 2 புதிய ஏவுகணைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து செலுத்தக்கூடிய தியாகி ஹஜ் காசிம் ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.