Others

கூட்டுறவுத்துறை அமைச்சர். வ.காந்திராஜ்— சிறப்பு செய்தி

செங்குன்றத்தில் தீபாவளி க்கு ரூ.200-ல் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர். வ.காந்திராஜ் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சி ஜி.என்.டி. சாலை, மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி (சுய சேவை பிரிவு) விற்பனை நிலையத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகளில் “ரூ.200-க்கு சிறப்பு மளிகை தொகுப்பு” வழங்கும் திட்டத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் பி.அமுதா முன்னிலையில் தொடங்கி வைத்து மருதம் பல்பொருள் அங்காடியை பார்வையிட்டு பொருள்களின் தரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா, கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கவிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.விஜய்பிரபு (மாதவரம்), மரு.எம்.எஸ்.ரவி (பொன்னேரி), கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவமலர், சைதாப்பேட்டை கூட்டுறவு சங்க பொது மேலாளர் நீதிராஜன், மேலாளர் தணிகாசலம் மற்றும் துறை அலுவலர்கள் த.வெ.க செங்குன்றம் நகரச் செயலாளர் கே.விஜி உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close