உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…! 2.2 கோடியாக அதிகரிப்பு!
World wide corona cases crosses 2.2 crore
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 2.02 கோடியாக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் தினமும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,304,310 என உயர்ந்துள்ளது. மேலும் உலகில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 784,319 என்பதும் குணமானவர்களின் எண்ணிக்கை 15,044,682 என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மொத்தம் 5,655,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 175,074 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
அதேபோல் பிரேசிலில் மொத்தம் 3,411,872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 110,019பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் 2,766,626 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 53,014 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.