கேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..! எதிர்க்கட்சிகள் திட்டம்!
No motion confidence against kerala government
திருவனந்தபுரம்:
கேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், கேரள சட்டசபை கூட்டத்தொடர், வரும், 24ல் துவங்குகிறது. இதில், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், கொரோனா பரவல், சற்று அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரள சட்டசபை கூட்டத்தொடர், 24ல் துவங்குகிறது. இதையடுத்து, சட்டசபையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இருக்கைகள் தள்ளி தள்ளி அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மாடங்களிலும், இதே பாணியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், சட்டசபை கூட்டத்தை பார்வையிட, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதியில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மாநிலத்தில், இப்போது தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தை வைத்து, அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இதற்காக, எதிர்க்கட்சிகள், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தால், வேறு எந்த அலுவல்களும் மேற்கொள்ளாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, தெரிகிறது.