ChennaiGeneralRETrending Nowதமிழ்நாடு
போலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..! என்கவுன்ட்ரில் சுட்டுக்கொலை!
Chennai rowdy encounter

சென்னை:
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர்.
அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஆய்வாளர் நடராஜன்
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஷங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ரவுடி சங்கர் வெட்டியதால் படு காயமடைந்த காவலர் கீழ்ப்பாக்கம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.