Others
ஜனாதிபதியை உள்துறை அமைச்சர் சந்தித்தார்….?
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை, அது தொடர்பாக ஜனாதிபதி முர்முவை அமித் ஷா சந்தித்தாரா என, அதிகாரிகள் மத்தியில் பேச்சு. ஆனால், அதுவும் இல்லையாம். ஜனாதிபதி முர்முவும், அமித் ஷாவும் என்ன பேசினர், எதை பற்றி விவாதித்தனர் என்பது அவர் களுக்கு மட்டுமே தெரியும்.மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் கூட இது சம்பந்தமாக எதுவுமே தெரியவில்லை. ஜனாதிபதியை பிரதமர் அல்லது மற்ற அமைச்சர்கள் சந்தித்தால், அது குறித்து அரசு தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், அமித்ஷா சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லாததால், அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். சில நாட்க ளுக்கு முன், பிரதமர் மோடியும், ஜனாதிபதி முர்முவை சந்தித்து பேசினார். அது பற்றியும் எந்த தகவலும் இல்லை.