பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்…?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, எம்ஜிஆரின் ஆதரவாளர் சக்கரவர்த்தி என்பவரால் நிறுவப்பட்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இந்த கட்சி மூலம் கடந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினார். இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின் சசிகலாவை தொடர்பு கொள்ள முடியாததால் அஇபுதமமுகபொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதாக, அக்கட்சி நிறுவனர் சக்கரவர்த்தி 2 நாட்களுக்கு முன் அதிரடியாக அறிவித்தார்இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சசிகலா சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அஇபுதமமுக கட்சியின் கொடி கட்டிய காரில் புறப்பட்டு சென்றார். அஇபுதமமுக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சி கொடி கட்டிய காரில் சசிகலா பயணித்தது பேசு பொருளாகி உள்ளது.