ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…! ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!
OBC Reservation, IAS officer appointed in tamilnadu
சென்னை:
ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ மேற்படிப்பில் ஓபிஎஸ் பிரிவினருக்கான 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர்பான குழுவுக்கு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் உள்ளார்.
தற்போது, தமிழக அரசு சார்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் 50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பாக 3 பேர் குழு அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.