fbpx
Othersஉலகம்

இந்திய, ஆஸ்திரேலியா – உறவு

மிகச்சிறப்பாகஉள்ளது - ஜெய்சங்கர்


இந்திய, ஆஸ்திரேலியா இடையேயான உறவு மிகச்சிறப்பாக உள்ளது - ஜெய்சங்கர்
இந்தியா, ஆஸ்திரேலியா உடனான உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மரிஸ் பெய்ன் தலைமையில் நான்காவது குவாட் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் இதில் கலந்துகொண்டனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மாரிஸ் பெய்ன், ஜப்பான் வெளியுறவுத் துறை மந்திரி யோஷிமாசா ஹயாஷி மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ‘கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் வகுக்கப்பட்ட தொலைநோக்கு பார்வையில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை மதிப்பாய்வு செய்ய இன்றைய கூட்டம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
குவாட் கூட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம், நமது இருதரப்பு உறவுகள் மிகவும் வலுவாக இருந்ததால் தான்.  இந்திய, ஆஸ்திரேலியா இடையேயான உறவு மிகச்சிறப்பாக இருப்பதாகவும், அது குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என தெரிவித்தார்.
இதனை தொடரந்து பேசிய ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி,
 யோஷிமாசா ஹயாஷி, ஜப்பானில் குவாட் உச்சி மாநாட்டை நடத்த விருப்பம் தெரிவித்தார்.
பிறகு, நாட்டு மக்களின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து திறம்பட செயல்படுகிறோம் என்பதை குவாட் மாநாடு மூலம் நிரூபிக்க முடியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி  ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி  மரிஸ் பெய்ன், தொழில்நுட்ப சிக்கல்கள், தீவிரவாத எதிர்ப்பு, காலநிலை மற்றும் தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்படவும், கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் மாநாட்டில் நிறைய வாய்ப்புள்ளதாக கூறினார்.
இந்த கூட்டத்தின் இடையே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி  ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close