fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்…! வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்!

Vande bharat plan 11.23 Indians returns homeland

டெல்லி:

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இதனை தொடர்ந்து, இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியாதாவது: கடந்த 19ந்தேதி வரையில் வெளி நாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள் பல்வேறு வழிகளிலும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் 5வது கட்டத்தில் 500 சர்வதேச விமானங்கள் மற்றும் 130 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு 22 நாடுகளில் இருந்து நாடு முழுவதுமுள்ள 23 விமான நிலையங்களை அவை வந்தடைந்து உள்ளன.  இதனுடன், இந்த மாத இறுதிக்குள் 357 சர்வதேச விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close