உயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்…! விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு!
Government hikes aviation security fees for passengers

டெல்லி :
விமான நிலைய பாதுகாப்புக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது: நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களை பாதுகாக்கும் பணிகளுக்காக, குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விமான சேவை நிறுவனங்கள், பயணியரிடம், டிக்கெட் கட்டணத்துடன், விமான நிலைய பாதுகாப்புக்கான கட்டணத்தையும் வசூலித்து, மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றன.
தற்போது, இக்கட்டணத்தை உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தில், விமான நிலைய பாதுகாப்பு கட்டணமாக, ஒரு டிக்கெட்டுக்கு, 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இது, 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதுபோல, சர்வதேச விமான போக்குவரத்தில், விமான நிலைய பாதுகாப்பு கட்டணம், 3.25 டாலரில் இருந்து, 4.85 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இது, ரூபாய் மதிப்பில், 243ல் இருந்து, 366 ஆக உயர்ந்துள்ளது.இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், பயணியரின் விமான செலவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.