fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…! மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

SPB health condition worsens says MGM hospital

சென்னை:

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:  கொரானா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது.

அவருக்கு  எக்கோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவ குழுவினர் தேசிய மற்றும் சர்வதேச மருத்துவர்களின் தொடர்பில் இருக்கிறார்கள்.

எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று  மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close