பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில்- மதபோதகருக்கு 30 ஆண்டுசிறை!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த இரு சிறுமிகளையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமிகள் இருவரையும் திட்டக்குடி பகுதியில் வசிக்கும் மதபோதகர் அருள்தாஸ் ,அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி , பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதே போல் திட்டக்குடியை சேர்ந்த தனலட்சுமி, மேகலா, நெல்லிக்குப்பம் ராதா, பாத்திமா, சேலம் அன்பு ஆகியோரால் இந்த சிறுமிகள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அதிரடி தேடுதல் மற்றும் கைது வேட்டையிஅம ல் இறங்கியது.30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் இரண்டு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடலூர் நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.
‘
1, கலா (48) விருத்தாசலம்
2, தனலட்சுமி , திட்டக்குடி,
3, ஸ்ரீதர் (23)
4, பாத்திமா(35) , வளவனுர்
5, ராதா (35), நெல்லிக்குப்பம் சுல்தான் பேட்டை ,
6, ஷர்மிளா பேகம் (34) விருத்தாச்சலம்,
7, கவிதா (34), வடலூர்,
8, அன்பழகன் 28 , சேலம்,
9, அமுதா (28), சேலம்,
10, மோகன் (28), திட்டக்குடி,
11, மதிவாணன் (23), திட்டக்குடி,
12, அன்பு, விருத்தாச்சலம்,
13, ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம்,
14, பாலசுப்ரமணியன் (42), புதுப்பேட்டை,
15, ராதிகா, பண்ருட்டி போதிய ஆதாரம் இல்லாததால்
16, மதபோதகர்,அருள்தாஸ் , திட்டக்குடி,
பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமியும் மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று காலை 11.30 மணிக்கு குற்றவாளிகள் அனைவரும் கடலூர் சிறையிலிருந்து மகளிர் நிதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் ஒவ்வொருவரிடமும் நீதிபதி லீகேஸ்வரன் தனித்தனியே விசாரணை நடத்தினார்.அதன் பின் குற்றவாளிகளின் தண்டனை விவரத்தை நீதிபதி வாசித்தார்.
மதபோதகர் அருள்தாஸிற்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் , ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனந்த்ராஜ் , பாலசுப்ரமணியங்கு 4 ஆயுள் தண்டனையும், கலா , தனலட்சிமி, ஸ்ரீதர், பாத்திமா போன்றோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் என வரிசையாக நீதிபதி தண்டனை பட்டியலை வாசித்தார்.















