fbpx
Others

சோனம்வாங்கக் விஷயத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசு…..

Image 1966-ல் பிறந்த சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர். விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் வித்தகர். கல்வி சீர்திருத்தவாதி. சூழலியல் செயற்பாட்டாளர். கடந்த 2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் தான் இந்த சோனம் வாங்சுக் ஆனால், அது மட்டுமே அவருக்கான புகழ் அடையாளமில்லை. சோனம் வாங்சுக் லடாக்கில் கல்வி முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த ‘மாணவர்களின் கல்வி மற்றும் கலாசார இயக்கம்’ (Students’ Educational and Cultural Movement – SECMOL) என்ற அமைப்பை தொடங்கினார். அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார். ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.1993 முதல் 2005 வரை வாங்சுக், ‘லடாக்ஸ் மெக்லாங்’ என்ற அச்சு இதழின் ஆசிரியராக இருந்தார். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது.2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா மோதலில் ஈடுபட்டபோது, ‘எல்லையில் வீரர்கள் சண்டை போடட்டும். நாம் சீனப் பொருட்களை வாங்காமல் ‘வாலட் பவர்’ (Wallet Power) காட்டுவோம்’ என்று முழங்கியவர்.2024 மார்ச் மாதம் வாங்சுக், லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.அவருக்குஆயிரக்கணக்கானோர்ஆதரவுதெரிவித்தனர்.தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை டெல்லி சலோ பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார். ஆனால், அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி, தடுப்புக் காவலில் எடுத்தது காவல் துறை. அக்டோபர் 2, 2024-ல் அவர் விடுவிக்கப்பட்டார்.அதன்பின்னர், லடாக் மாநில அந்தஸ்துக்கான அவரது குரல்நீட் வினாத்தாள் கசிவு: ரூ.1,500 கோடி சம்பாதித்த மகராஷ்டிர பயிற்சி மைய  உரிமையாளர்? இன்னும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதற்கு போதிய சுயாதீன சக்திகள் இல்லை. லடாக் கலாசார, சூழலியல் அடையாளத்தை பாதுகாக்க வலுவான சட்டப்பேரவை வேண்டும்.அதில்,உள்ளூர்வாசிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று தொடர்ந்து முழங்கி வருகிறார் வாங்சுக். மேலும் 2025-ல் அவர் இந்தக் கோரிக்கையைவலியுறுத்திஉண்ணாவிரதப்போராட்டமும்நடத்தினார்என்பதுஇங்கேகுறிப்பிடத்தக்கது.காந்தி தொடங்கி தற்போது சோனம் வாங்சுக் வரை பல்வேறுகாலக்கட்டத்திலும்,உண்ணாவிரதப்போராட்டங்கள்மூலம்இந்தியாஉலகக்கவனத்தைஈர்த்துள்ளதுஎன்றுதான்சொல்லவேண்டும்.காந்தி தன் வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார். 1918-ல் அகமதாபாத் ஆலை தொழிலாளர்களுக்காக அவர் மேற்கொண்டதே, இந்தியாவில் அவரது முதல் உண்ணாவிரதப் போராட்டம் என்று அறியப்படுகிறது. அதன் பின்னர் 1924, 1933, 1943 என மூன்று முறை அவர் தொடர்ச்சியாக 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார்.போராட்டக் களத்தில் அவர் பின்னால் இருப்பது ஒற்றைக் கோரிக்கை தான் ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’.சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொள்வது புதிதல்ல. இப்போதையப் போராட்டம் நீண்டு கொண்டு செல்வதுதான் புதிது.கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே இந்தியாவில் நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவை மையப்படுத்தி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தார். அவருக்கு ஆதராவகவே கடந்த ஜூன் 28-ம் தேதி சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.ஜந்தர் மந்தரில் சோனம் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்கு அன்றாடம் ஊடகங்களும், இளைஞர்களும், பொது மக்களும் சாரை சாரையாக வருகின்றனர். பெரும்பாலான நேரம் சோனமுடன் மேடையில் அமர்ந்திருக்கும் அபிஜித், “நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி சொல்கிறோம். ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார். இதுவரை அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கும் அவரது ஆதரவாளர்களும் உயிரிழக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு சிஜேபி ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 15 முதல் 29 வயதில் உள்ள இந்தியர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 10% ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதுவும் நகர்ப்புறங்களில் இந்த சதவீதம் 13.6 ஆக உள்ளது.வேலை வாய்ப்பின்மையும், கல்வி கற்கும் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் மீது அரசு கொண்ட அலட்சியமும் தான் இன்று 22 மில்லியன்Image ஃபாலோயர்ஸை சிஜேபிக்கு உருவாக்கியுள்ளது,” என்று கூறுகிறார் போராட்டக் களத்தில் உள்ள இளைஞர் ஒருவர்.இன்னொரு இளைஞர், “2014-ல்அமைந்தமோடிஅரசுஇதுபோன்றதொரு எதிர்ப்பைக் கண்டதில்லை. இந்த எதிர்ப்பை அவர்கள் அசட்டை செய்கிறார்கள். அதன் பலனை அறுவடை செய்வார்கள்” என்று கூறுகிறார்.ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், சசி தரூரும் சோனம் வாங்சுக் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்துகின்றனர்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ‘சோனம் வாங்சுக் இன்னும் 2 தினங்களுக்கு கூட உயிருடன் இருக்க மாட்டார். அவரை உடனடியாக வலுக்கட்டாயமாக உணவு உட்கொள்ளச் செய்யுங்கள்’ என்றுகோரப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரப்பட்ட நிலையில், அது நாளை (ஜூலை 16) விசாரணைக்கு வருகிறது.அந்த மனுவில் “சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் 18-வது நாளை எட்டியுள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறைகூட இல்லை. அரசு இவ்விவகாரத்தில் உணர்வற்றதாக இருக்கிறது. ஒரு கொடுங் குற்றவாளி, தேசத் துரோகி, தீவிரவாதையைப் போல் சோனம் வாங்சுக்பாவித்துபாராமுகம்காட்டுகிறது.அவரைஇப்படியேஇறக்கவிட்டால்அதுதேசம்தன்கண்முன்னரேஒருகுடிமகனைமரணிக்கவிடும்அவலம்”என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இன்று மத்திய அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ ப்ளஸ் 2 ஹேர்வில் ஓஎஸ்எம் மதிப்பீட்டில் முறைகேடு, இன்னும் பல தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி என்று மாணவர்கள், இளைஞர்கள் கோபத்துக்கு தொடர்ந்து ஆளாகிவரும் மத்திய அரசு சோனம் வாங்சுக் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கோ, இல்லை பிரதான் பதவி விலகல் குறித்தோ எதுவுமே பேசாமல் காக்கும் மவுனத்துக்கு மிகப் பெரிய விலை காத்திருக்கிறது என்றுஎச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். நாளைய தீர்ப்பை தான் அறம் கொண்டோர் உள்ளங்கள் எதிர்நோக்கியிருக்கின்றன என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.“போராட்டக் களத்தில் சோனம் வாங்சுக் பின்னால் இருப்பது ஒற்றைக் கோரிக்கை தான் ‘தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’. அப்படியிருக்க மத்திய அரசின் போக்கு ஈவு இரக்கமற்ற அணுகுமுறை” என்கின்றனர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்கள்.

Related Articles

Back to top button
Close
Close