fbpx
உணவு

சண்டே ஸ்பெஷல் ; ஹைதராபாத் தம் பிரியாணி

தேவையான பொருட்கள் ;

1. அரிசி 1/2 கிலோ
2. சிக்கன் 1/2 கிலோ
3. வெங்காயம் 1/4 கிலோ
4. பட்டை, இலவங்கம், ஏலக்காய் சிறிது
5. பச்சைமிளகாய் 4
6.கொத்திமில்லி அரை கப்
7. புதினா அரை கப்
8. தயிர் அரை கப்
9.எலுமிச்சை 1
10. ஷாஹீ சீரா 2 ஸ்பூன்
11. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
12. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
13. இஞ்சி, பூண்டு கலவை 3 ஸ்பூன்
14. உப்பு தேவையான அளவு
15. எண்ணெய் 200 மில்லி
16. கரம் மசாலா 1 ஸ்பூன்

செய்முறை;

முதலில் கழுவி வைத்த சிக்கனை பிரியாணி செய்ய வேண்டிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு கலவை , கொத்திமில்லி, புதினா ,சிறுது அரைத்த பச்சைமிளகாய் , தயிர், கரம் மசாலா, மிளகாய் தூள், ஷாஹீ சீரா, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, எண்ணெய், உப்பு தேவையான அளவு இதை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்கு ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை செய்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

அடுத்து செய்யவேண்டியது வெங்காய வருவல் ;

வெங்காயத்தை நீட்டு போக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ள வேண்டும் . நறுக்கிய வெங்காயத்தை எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும் . இவ்வாறு பொன்னிறமாக வறுத்த
வெங்காயத்தில் பாதியை முன்னர் செய்த கலவையில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அரிசி பதம் ;

30 நிமிடத்திற்கு முன்னரே அரிசியை ஊறவைத்து கொள்ள வேண்டும். ஊறவைத்த அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய் மற்றும் உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் வேக்காடு வெந்ததும் வடிகட்டி கொள்ள வேண்டும்.

தம் வைப்பது;

முன்னர் நாம் செய்து ஊற வைத்த சிக்கன் கலவையில் வடிகட்டிய சாப்பாட்டை கொட்டி 20 நிமிடம் தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொட்டிய சாப்பாட்டின் மேல் மீதமுள்ள வறுத்த வெங்காயத்தையும், சிறிது புதினாவையும், நெய்யையும் சேர்க்க வேண்டும்.

20 நிமிடம் தம் கொடுத்தபின் பரிமாறுவதற்கு ஹைதிராபாத் தம் பிரியாணி தயார் ஆகிவிட்டது.

Related Articles

Back to top button
Close
Close