பொருநை அருங்காட்சியகத்தில் விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
விடுமுறை நாளில் மக்கள் கூட்டம் அலைமோதிய பொருநை அருங்காட்சியகம் – தமிழர் தொன்மை நாகரிகத்தை அறிய சுற்றுலா பயணிகள் ஆர்வம்
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை அதிகரித்து மக்கள் கூட்டம் அலைமோதியது. குடும்பத்தினருடன் வந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் என ஏராளமானோர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தமிழர் தொன்மை நாகரிகத்தின் பெருமைகளை அறிந்து சென்றனர்.தமிழக அரசின்சார்பில்பலகோடிரூபாய்மதிப்பீட்டில்உருவாக்கப்பட்டுள்ள இந்த பொருநை அருங்காட்சியகம், தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்த பண்டைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றுகளை உலகிற்கு எடுத்துக் காட்டும் முக்கிய மையமாக திகழ்கிறது. 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துளுக்கர்பட்டி உள்ளிட்ட தொல்லியல் அகழாய்வு தளங்களில் கண்டெடுக்கப்பட்டஅரியபொருட்கள்மற்றும்வரலாற்றுசின்னங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.விடுமுறை தினத்தை முன்னிட்டு காலை முதலே பொதுமக்கள் வருகை அதிகரித்த நிலையில், அருங்காட்சியக வளாகம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, மண்பாண்டங்கள், கல்வெட்டுகள், இரும்பு பயன்பாடு, பழமையான நாணயங்கள் மற்றும் தமிழர்களின் வணிக வரலாறுகுறித்துஆர்வத்துடன்அறிந்துகொண்டனர்.அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஒளி-ஒலி தொழில்நுட்பங்கள், மெய்நிகர் காட்சிகள் மற்றும் வரலாற்று விளக்கங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. தமிழர் வரலாற்றை நேரடியாக அனுபவிப்பதைப்போன்றஉணர்வைஏற்படுத்தும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அருங்காட்சியகம் திறக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வருவதுடன், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் தொன்மையை அறிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அறிவுக் களஞ்சியமாக மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும் உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் D






